நாளை வெளியாகிறது விஜய் சேதுபதியின் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… படக்குழு அறிவிப்பு…
விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர், தற்போது தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பாலிவுட்டில் மாபெரும் ஹிட்டடித்த ‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனின் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளார். அதிரடி திரில்லராக உருவாகும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தின் முதற்கட்ட பணிகளின் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் தொடங்கும் படத்தின் ஷூட்டிங் புனேவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கை சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார். இதில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் படமான இப்படத்திற்கு ‘மும்பைகார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹீரோ விக்ராந்த்துக்கு நாளை பிறந்தநாள். இதையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் ஏப்ரல் 3ம் தேதி 3மணிக்கு படக்குழு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.