×

இந்தியில் வேகமாக உருவாகும் ‘விக்ரம் வேதா’... ஹிரித்திக்கின் பிறந்தநாளில் வெளியாகும் முக்கிய அப்டேட் !

 
ஹிரித்திக் ரோஷன் பிறந்தநாளையொட்டி இந்தியில் உருவாகும் ‘விக்ரம் வேதா’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது. 

போலீஸ், கேங்ஸ்டர் என  இரு கோணத்தில் பயணிக்கும் இருவரை ஒரு புள்ளியில் சந்திக்கும் வைக்கும் கதைக்களத்தை கொண்ட திரைப்படம் ‘விக்ரம் வேதா’.  நடிகர் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்தது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர்.

நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக்காகி வருகிறது. ஹிரித்திக் ரோஷன் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர்- காயத்ரியே இயக்கி வருகின்றனர். சசிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் ரவுடியாக ஹிரித்திக்கும், போலீசாக சயீப் அலிகானும் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோ பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை சமீபத்தில்தான் சயீப் அலிகான் நிறைவு செய்தார். இந்நிலையில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ‘வேதா’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நாளை வெளியிடவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படம் அடுத்த அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.