×

அடுத்தக் கட்டத்திற்கு நகரும் ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்.. படப்பிடிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு !

 

 ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.  

போலீஸ், கேங்ஸ்டர் என  இரு கோணத்தில் பயணிக்கும் இருவரை ஒரு புள்ளியில் சந்திக்கும் வைக்கும் கதைக்களத்தை கொண்ட திரைப்படம் ‘விக்ரம் வேதா’.  நடிகர் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்தது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர்.

நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக்காகி வருகிறது. ஹிரித்திக் ரோஷன் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர்- காயத்ரியே இயக்கி வருகின்றனர். சசிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் ரவுடியாக ஹிரித்திக்கும், போலீசாக சயீப் அலிகானும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. இந்த படம் அடுத்த அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.