×

உங்கள் ரசிகையாக இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்… கங்கானாவைச் சாடிய செல்வராகவன் பட நடிகை!

நடிகை, வமிகா கஃபியை கங்கனா ரணாவத் ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார். அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக வமிகா தெரிவித்துள்ளார். செல்வராகவன் திரைக்கதை எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மூலம் நடிகை வமிகா தமிழில் அறிமுகமானார். எஸ்ஜே சூர்யாவின் இறவா காலம் படத்திலும் நடித்துள்ளார். வமிகா டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை கங்கனா தன்னை பிளாக் செய்துள்ளதாக வமிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
 

நடிகை, வமிகா கஃபியை கங்கனா ரணாவத் ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார். அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக வமிகா தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் திரைக்கதை எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மூலம் நடிகை வமிகா தமிழில் அறிமுகமானார். எஸ்ஜே சூர்யாவின் இறவா காலம் படத்திலும் நடித்துள்ளார்.

வமிகா டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை கங்கனா தன்னை பிளாக் செய்துள்ளதாக வமிகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நல்லது, நீங்கள் என்னை ப்ளாக் செய்தது எனக்கு மகிழ்ச்சி தான். தன்னுடைய முன்னாள் டிவீட்களில் மற்ற பெண்களுக்கு அவர் எப்படி பதிலளிபத்திருந்தாரோ அதே போல் எனக்கும் செய்திருந்தால் என் மனம் புண்பட்டிருக்கும். உங்கள் இதயத்தில் ஏராளமான அன்பைக் கொண்டிருக்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “நான் உங்கள் ரசிகையாக இருந்தேன். அதற்காக தற்போது வெட்கப்படுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு கங்கனா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களுக்கு எதிராக பேசி வருவது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.