×

நம்மிடையே உருவகேலி செய்வது ஊறிப்போய்விட்டது... 'வலிமை' பட நடிகை வேதனை!

 

நடிகை ஹுமா குரேஷி அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு முன்னர் ரஜினி உடன் காலா படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் வலிமை படம் தான் அவருக்கு அதிக வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தற்போது ஹுமா சத்ரம் ரமணி இயக்கத்தில் 'டபுள் எக்ஸல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம்  உடல் எடையை வைத்து உருவக் கேலி செய்யப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாவோரின் கதையாக மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக அவர் தனது உடல் எடையை அதிகமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் சோனாக்க்ஷி சின்ஹா, ஜாகீர் இக்பால் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். 

தற்போது இந்தப் படம் குறித்து பேசியுள்ள ஹுமா குரேஷி, "பெண்களாகிய நாங்கள், ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறோம். உருவக் கேலி என்பது அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாக மாறிவிட்டது.

உருவக் கேலி நம்முள் ஊறிப்போய்விட்டது. உருவக் கேலி என்பது ஒருவரின் நம்பிக்கையை முழுமையாக சிதைத்துவிடுகிறது. இந்தப் பிரச்னையை மையப்படுத்திய திரைப்படத்தை உருவாக்கி, இது தொடர்பான ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுக்க விரும்பினோம். அதனை ஆவணப்படமாக எடுப்பத்தில் எங்களுக்கு விருப்பமில்லை. அதை ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி மக்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.