×

பெண்களைப் பாதுகாப்பதை விட ஆண்பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதே முக்கியம்… ஆயுஷ்மான் குரானா!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா பெண்களை பாதுகாப்பதை விட ஆண் பிள்ளைகளைத் தான் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சேர்ந்த 19 வயது இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். பின்னர் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அதே உத்திரபிரதேச மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில்
 

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா பெண்களை பாதுகாப்பதை விட ஆண் பிள்ளைகளைத் தான் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சேர்ந்த 19 வயது இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். பின்னர் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அதே உத்திரபிரதேச மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 22 வயதுப் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் சாதி மற்றும் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த கொடூரங்களுக்கு எதிராக மக்கள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது இந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ள நடிகர் ஆயுஷ்மான் குரானா “யுனிசெப்பின் பிரபல வழக்கறிஞராக, எனது பங்கு குழந்தைகளின் உரிமைகளை மேலும் மேம்படுத்துவதும், என் குரலையும் எனது செல்வாக்கையும் பயன்படுத்தி இந்த உரிமைகளுக்காக வாதிடுவதன் மூலம் யுனிசெப்பை ஆதரிப்பதாகும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதே நான் ஆதரிக்கும் ஒரு முக்கிய பிரச்சினை.
“குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அந்த குற்றங்கள் குறித்து புகார்கள் அளிக்கப்படுவதையோ, அல்லது அந்த குற்றம் குறித்து பேசப்படுவதையோ நாம் பார்த்திருக்கிறோமா? இந்த பிரச்சினையில் நான் அதிக கவனம் செலுத்துவேன். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அடையாளம் காணும்படி செய்கிறேன். குற்றம் நடந்தால் அது பற்றி தெரிவிக்க மக்கள் முன்வரவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் “அதிர்ச்சியாகவும், சோகமாகவும் இருக்கிறது. ஹாத்ரஸ் சம்பவத்தை தொடர்ந்து பல்ராம்பூர் மாவட்டத்தில் இன்னொரு பெண்ணும் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது காட்டுமிராண்டித் தனமானது, மனிதத்தன்மையற்றது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் எப்போது நிறுத்தப்படும்?

நம் நாட்டு பெண்களை நாம் ஒவ்வொரு நாளும் பாதுகாக்க தவறுகின்றோம். பெண்களை பாதுகாப்பதை விட ஆண்பிள்ளைகளை ஒழுக்கமாக நாம் வளர்க்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.