×

ஒரு டஜன் புள்ளைங்க பெத்துக்கணும்… பிரபல உலக அழகியின் ஆசை…

தன்னைவிட 10 வயது குறைவானவரை திருமணம் செய்துக்கொண்டது குறித்து மனம் திறந்துள்ளார் பிரபல உலக அழகி பிரியங்கா சோப்ரா… உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் சமூகவலைத்தளத்தில் உலா வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டார். தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனாஸ் உடனான திருமண உறவு மற்று கலாச்சார இடைவெளி வெளிப்படையாகவே
 

தன்னைவிட 10 வயது குறைவானவரை திருமணம் செய்துக்கொண்டது குறித்து மனம் திறந்துள்ளார் பிரபல உலக அழகி பிரியங்கா சோப்ரா…

உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் சமூகவலைத்தளத்தில் உலா வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டார்.

தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனாஸ் உடனான திருமண உறவு மற்று கலாச்சார இடைவெளி வெளிப்படையாகவே பேசி வருகிறார் பிரியங்கா.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பிரியங்கா பேட்டியளித்தார். அப்போது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்ட்டது. அதில் எனக்கும், நிக்கிற்கு இடையேயான உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. வயது ஒரு பிரச்சனையே இல்லை, இந்திய கலாச்சாரத்தை நிக், புரிந்துக்கொண்டுள்ளார். எங்கள் உறவு சாதாரண ஜோடிகளை போல ஒருவரைஒருவர் புரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். அதுவும் ஒன்றல்ல, ஒரு கிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பெற்றுக்கொள்ள ஆசை என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.