×

காதலில் விழுந்தாரா ஸ்ரீதேவியின் மகள் ?… கிசுகிசுக்கும் பாலிவுட்…

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலிப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்டுகிறது. நடிகை ஶ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தடக் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து நெட்பிளிக்ஸுக்காக கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும்
 

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலிப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்டுகிறது.

நடிகை ஶ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தடக் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து நெட்பிளிக்ஸுக்காக கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தடக் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை ஜான்வி காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. 

பின்னர் அந்த தகவலை மறுத்த அவர்கள், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என கூறினர். அதன் பிறகு தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்தார். ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. 

இதனை உறுதிப்படுத்துவதுபோல் கார்த்திக் ஆர்யனும், ஜான்வி கபூரும் கோவாவில் ஒரே நிறத்தில் டீ-சர்ட் அணிந்து ஜோடியாக சுற்றிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.