×

கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் படக்குழு… தகவல் சொல்லாத ‘ஸ்ருதி ஹாசன்’

விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் பெரும்பகுதி முடிக்கப்பட்டும் நடிகை ஸ்ருதி ஷுட்டிங்கிற்கு வராததால், படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடிப்போட்டு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் லாபம். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படத்திற்கு
 

விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் பெரும்பகுதி முடிக்கப்பட்டும் நடிகை ஸ்ருதி ஷுட்டிங்கிற்கு வராததால், படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடிப்போட்டு பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் லாபம். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரனாவால் இந்த படத்தின் ஷுட்டிங் தடைப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடங்கப்பட்டு 90 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. ஸ்ருதி ஹாசன் இல்லாத பகுதிகள் மட்டும் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பகுதிகள் காட்சிகளாக்கப்பட்டால் படத்தின் ஷுட்டிங் முடிந்துவிடும். இதுதொடர்பாக ஸ்ருதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், எவ்வித பதிலும் வரவில்லை என படக்குழு கதறிக்கொண்டிருக்கிறது.