×

நீங்கள் ஆக்ஸ்ஃபோர்டில் பட்டம் பெற்றது ஒரு சாதனை: மலாலாவை வாழ்த்திய நடிகை பிரியங்கா சோப்ரா…

சிறுவயது முதல் பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெண் கல்விக்காக பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு வருபவர் மலாலா. கடந்த 2012 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியாக இருந்தபோது, தீவிரவாதிகளால் சுடப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த மலாலா உலகம் முழுதும் பிரபலமானார். மேலும், 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஆவார். உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும் மலாலாவையேச் சேரும்.. இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும்
 

சிறுவயது முதல் பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெண் கல்விக்காக பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு வருபவர்  மலாலா.  கடந்த 2012 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியாக இருந்தபோது, தீவிரவாதிகளால் சுடப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த மலாலா உலகம் முழுதும் பிரபலமானார். மேலும், 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஆவார். உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும் மலாலாவையேச் சேரும்..

இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த மலாலா, தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.இதற்கு உலகம் முழுக்க பலரும் சமூக வலைதளங்களில் மலாலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் மலாலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்  ப்ரியங்கா கூறியுள்ளதாவது: “வாழ்த்துக்கள்! ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பெற்ற தத்துவம், அரசியல், பொருளாதாரம் படிப்புக்கான பட்டம் ஒரு சாதனை. எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.