×

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரானா தொற்று உறுதி..

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரானா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரானாவின் 2வது அலை நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை 4லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானா தொற்றால் உயிரிழிப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த தொற்றால் திரைப்பிரபலங்களும் பாதித்து வருகின்றனர். இந்தியாவில் ஏற்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. கொரானா தொற்று பற்றிய பல்வேறு விழிப்புணர்வுகளை அரசும்,
 

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரானா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரானாவின் 2வது அலை நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை 4லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானா தொற்றால் உயிரிழிப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த தொற்றால் திரைப்பிரபலங்களும் பாதித்து வருகின்றனர். இந்தியாவில் ஏற்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. கொரானா தொற்று பற்றிய பல்வேறு விழிப்புணர்வுகளை அரசும், திரைப்பிரங்களும் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே திரைப்பிரபலங்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டும், இறந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். பிசியாக படங்களில் நடித்து வரும் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரானா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைபடி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். கங்கனாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.