×

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்து ஏற்பாடு செய்து சொந்த ஊர் அனுப்பி வைத்த நடிகர்..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேத் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் புலம் பெயர்ந்த மற்றும் மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே பயணிகத் தொடங்கிவிட்டனர். அப்படி தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற 12 வயது
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேத் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் புலம் பெயர்ந்த மற்றும் மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே பயணிகத் தொடங்கிவிட்டனர். அப்படி தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற 12 வயது சிறுமி, உடல் சோர்வால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

இந்நிலையில் ’சந்திரமுகி’ , ‘அருந்ததி’ , ‘ஒஸ்தி’, ‘தேவி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான  நடிகர் சோனு சூட், மஹாராஷ்டிராவில் சிக்கித் தவித்த தொழிலாளிகளுக்காக பேருந்து ஏற்பாடு செய்துள்ளார். தானேவிலிருந்து கர்நாடகாவின் குல்பர்கா பகுதிக்குச் செல்ல அவர் சில பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தார். தொழிலாளர்களை  சோனு சூட் பேருந்து நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.

இதுபற்றி அவர், “சர்வதேச அளவில் நாம் ஒரு உடல்நலப் பிரச்சினையைப் பேரிடராகச் சந்திக்கும்போது, ஒவ்வொரு இந்தியரும் அவரது குடும்பத்துடனும், அன்பானவர்களுடன் இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டு அரசாங்க தரப்பிடமிருந்தும் நான் அதிகாரபூர்வமாக அனுமதி பெற்று, பத்து பேருந்துகளில் இந்தத் தொழிலாளர்கள் அவர்கள் வீடு திரும்புவதற்கான உதவிகளைச் செய்திருக்கிறேன்.

மகாராஷ்டிர அரசாங்கம் அனுமதிக்கான விண்ணப்பம் உள்ளிட்ட விஷயங்களை எளிதாக்கியது. தொழிலாளர்களை மீண்டும் வீடு திரும்ப வரவேற்கும் கர்நாடக அரசைப் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகள், வயதான பெற்றோர் என இவர்கள் சாலைகளில் நடப்பதைப் பார்த்த போது நான் உடைந்து விட்டேன். என்னால் முடிந்த வரை இன்னும் மற்ற மாநிலத் தொழிலாளர்களுக்கும் போக்குவரத்து ஏற்பாடு செய்வதைத் தொடர்வேன்” என்று சோனு சூட் கூறியுள்ளார்.

ஏற்கெனவே சோனு சூட், ஜூஹூ பகுதியில் இருக்கும் தனது ஹோட்டலை, களப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள தானமாக கொடுத்துள்ளார்.  மேலும் பஞ்சாபில் இருக்கும் மருத்துவர்களுக்காக 1,500 பாதுகாப்பு உபகரணங்களைத் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.