×

“தி ஒயிட் டைகர்” படத்திற்கு கிடைத்த கௌரவம்… ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சி!

உலக அளவில் “தி ஒயிட் டைகர்” படம் முதலிடம் பிடித்துள்ளதால், அதில் நடித்த ப்ரியங்கா சோப்ரா உற்சாகத்தில் உள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள ப்ரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் “தி ஒயிட் டைகர்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அரவிந்த் அதிகா எழுதிய “தி ஒயிட் டைகர்” நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. ராமின் பஹ்ரானி இயக்கிய இப்படத்தில் புதுமுக நடிகர் ஆதர்ஷ் கவுரவ் ஹீரோவாகவும், பிரியங்கா துணை நடிகராகவும் நடித்துள்ளனர். கடந்த
 

உலக அளவில் “தி ஒயிட் டைகர்” படம் முதலிடம் பிடித்துள்ளதால், அதில் நடித்த ப்ரியங்கா சோப்ரா உற்சாகத்தில் உள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள ப்ரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் “தி ஒயிட் டைகர்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அரவிந்த் அதிகா எழுதிய “தி ஒயிட் டைகர்” நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. ராமின் பஹ்ரானி இயக்கிய இப்படத்தில் புதுமுக நடிகர் ஆதர்ஷ் கவுரவ் ஹீரோவாகவும், பிரியங்கா துணை நடிகராகவும் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி 22ம் தேதி அன்று தி ஒயிட் டைகர் வெளியானது.

“தி ஒயிட் டைகர்” படம் ஓடிடியில் வெளியானது. நெட்ஃபிக்ஸ்-ல் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நெட்ஃபிக்ஸ் சமீபத்திய தரவரிசையில் தி ஒயிட் டைகர் முதல் இடம்பிடித்துள்ளது. தி ஒயிட் டைகர் முதலிடத்திலும், அதன்பின் அவுட் சைட் தி வயர், வி கேன் பி ஹீரோஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்த ப்ரியங்கா, “#TheWhiteTigerNetflix உலகளவில் நெட்ஃபிக்ஸ்-ல் முதலிடத்தில் இருப்பதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.