×

படம் ஆரம்பிப்பதற்கு முன்பே 30 கோடி லாபம் பார்த்த தயாரிப்பு நிறுவனம்.!

தமிழ் சினிமாவில் ஹையெஸ்ட் சம்பளம் வாங்கும் இயக்குனர் அவர்.இளம் ஹீரோக்களில் டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோவும் சேர்ந்து இன்னொரு பிஸ்டல் படம் எடுக்கப் போவதாக அறிவிப்பு வந்து,வந்த வேகத்திலேயே பட்ஜெட் பத்தாதுன்னு டிராப் ஆனது எல்லோருக்கும் தெரியும். இயக்குனர் கேட்டது என்ன… தயாரிப்பாளர் தரப்பு எதுக்காக மறுத்தார்கள் என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. இயக்குனர் சொன்ன கதை பிடித்துப்போய்தான் ஹீரோவும், தயாரிப்பு நிறுவனமும் அந்த இயக்குநரைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்.நீங்க சொன்ன கதைக்கு 120 கோடி வரை நாங்க
 

தமிழ் சினிமாவில் ஹையெஸ்ட் சம்பளம் வாங்கும் இயக்குனர் அவர்.இளம் ஹீரோக்களில் டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோவும் சேர்ந்து இன்னொரு பிஸ்டல் படம் எடுக்கப் போவதாக அறிவிப்பு வந்து,வந்த வேகத்திலேயே பட்ஜெட் பத்தாதுன்னு டிராப் ஆனது எல்லோருக்கும் தெரியும். இயக்குனர் கேட்டது என்ன… தயாரிப்பாளர் தரப்பு எதுக்காக மறுத்தார்கள் என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் சொன்ன கதை பிடித்துப்போய்தான் ஹீரோவும், தயாரிப்பு நிறுவனமும் அந்த இயக்குநரைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்.நீங்க சொன்ன கதைக்கு 120 கோடி வரை நாங்க செலவு பண்ணத் தயார் என்றதும் இயக்குனர் உற்சாக மாகியிருக்கிறார்.நீங்களே ஃபர்ஸ்ட் காப்பி பண்ணிக் கொடுத்திருங்க என்று சொன்னதும் இதைவிட ஒரு ஜாக்பாட் கிடைக்குமா என்று அங்கேயே ஓகே சொல்லிவிட்டு ஆபிஸ்க்கு வந்திருக்கிறார்.

உதவியாளர்கள்,தயாரிப்பு நிர்வாகி எல்லோருமாக உட்கார்ந்து பட்ஜெட் போட்டுப் பார்த்ததில் தயாரிப்பாளர் கொடுத்த பட்ஜெட்டில் நிறைய லாபம் இருக்குமென்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் ஹீரோ சைட்டிலிருந்து அவருக்கான பேமெண்ட் எவ்வளவு என்ற தகவல் துண்டு சீட்டு வடிவில் வந்திருக்கு.அதைப் பார்த்த இயக்குனர் மயங்கி விழாதது மட்டும்தான் பாக்கி! அடுத்த பாராவைப் படிச்சா உங்களுக்கே அந்த நிலமை வரலாம் என்பதால் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஹீரோ,இதே இயக்குனரோடு சேர்ந்து ஒர்க் பண்ணின முதல் படத்தில் 50 கோடி வாங்கியிருக்கார். அந்த நினைப்பில் தன்னோட சம்பளம் 30 கோடி சேர்த்தால் 80 கோடியாகுது. மிச்சமிருக்கிற 40 கோடி படப்பிப்புக்கு தாராளமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த இயக்குனருக்கு துண்டு சீட்டில் எழுதியிருந்த 80 சி என்ற வார்தையைப் பார்த்ததும் அதிராமல் என்ன செய்வார்!?

இடைப்பட்ட காலத்தில் ஹீரோவின் சம்பளம் கூடிய விபரம் தெரியாததால் ஃபர்ஸ்ட் காப்பிக்கு ஓகே சொல்லியிருக்கிறார். துண்டு சீட்டு கணக்குப்படி பார்த்தால், இயக்குனர், ஹீரோ சம்பளம் மட்டுமே 110 கோடி ஆகிடும். மிச்சமிருக்கிற 10 கோடியை வச்சு எப்படி படம் எடுக்க முடியும்?! பதறிப்போய் தயாரிப்பு நிர்வாகத்தைக் கேட்டால் அதுக்கு மேல ஒரு லட்சம் கூட தர முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம்.

யாருமே சம்பளத்தைக் குறைக்க முடியாது என்று ஒத்தைக்காலில் நின்றுவிட, அப்புறம் தான் ஹீரோ வேறொரு இயக்குனரை டிக் அடித்திருக்கிறார். இவருக்கு சம்பளம் சில கோடிதான். அதனால் தயாரிப்பாளர் தரப்பும் டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்கள். கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தால் இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே 30 கோடி லாபம்.!