×

அம்மா நடிகை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.!? ஆச்சர்யத்தில் இளம் நடிகைகள்.!

எண்பதுகளில் அறிமுகமான நடிகைகளில் ஒன்றிரண்டு நடிகைகள் தவிர மத்த நடிகைகள் எல்லாம் ஏகத்துக்கும் வெயிட் போட்டு வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இளமையான அம்மாக்களில் இவர்தான் இப்போதும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் மோஸ்ட் வான்டட் அம்மா! ‘தண்ணி கொஞ்சம் ஏறியிருக்கு கம்மா கரையில…’ என்று இந்தப்பக்கம் இளசுகளை சூடேற்றிக் கொண்டிருந்த நடிகை, தெலுங்குக்கு போன பிறகு ராயலான அம்மா கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.தெலுங்கு ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடித்துவிட படங்களின் எண்ணிக்கையும் எகிறத் தொடங்கியது. அதிலும்,
 

எண்பதுகளில் அறிமுகமான நடிகைகளில் ஒன்றிரண்டு நடிகைகள் தவிர மத்த நடிகைகள் எல்லாம் ஏகத்துக்கும் வெயிட் போட்டு வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இளமையான அம்மாக்களில் இவர்தான் இப்போதும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் மோஸ்ட் வான்டட் அம்மா!

‘தண்ணி கொஞ்சம் ஏறியிருக்கு கம்மா கரையில…’ என்று இந்தப்பக்கம் இளசுகளை சூடேற்றிக் கொண்டிருந்த நடிகை, தெலுங்குக்கு போன பிறகு ராயலான அம்மா கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.தெலுங்கு ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடித்துவிட படங்களின் எண்ணிக்கையும் எகிறத் தொடங்கியது.

அதிலும், இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் இயக்கி வெளிவந்த பீரியட் படம் வந்த பிறகு சொல்லவே வேண்டாம். படங்களின் எண்ணிக்கையோடு சம்பளமும் எகிறிவிட்டது. அதுவரை படத்துக்கு எத்தனை நாள் வேண்டுமோ அதற்கேத்த மாதிரி ‘பேக்கேஜ்’ ஆக ஒரு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் அதன் பிறகு ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் என்று அறிவித்தார். மறுக்காமல் அதையும் தாராளமாக அள்ளிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.

தவிர, ஷூட்டிங் ஸ்பாட்டில் டாப் ஹீரோ, ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் ‘சகல’ வசதியும் கொண்ட கேரவன்தான் இவருக்கும். ஸ்பாட்டுக்கு வரும்போதே மொத்த செட்டும் பரபரப்பாகிவிடுமாம்! தமிழுக்கு நடிக்க வந்தால் இது எதுவுமே நடக்காது. சம்பளத்தையும் ‘கிள்ளி’க் கொடுப்பார்கள். அதனால் தெலுங்கு சினிமாவிலேயே ‘ராஜமாதா’வாகவே இருப்பதென்று முடிவெடுத்து விட்டாராம். இதையெல்லாம் பார்க்கும் இளம் நடிகைகள் வயித்தெரிச்சல் படாமல் எப்படி இருப்பார்கள்!?