×

தங்கக் கடத்தலில் இறங்கியுள்ள பிரபல நடிகை… போலீஸ் வளையத்திற்குள் சிக்கிய முன்னணி நடிகர்கள் !?

தமிழ் சினிமாவுக்கு ஹோல் சேலில் நடிகைகளை அனுப்பும் மாநிலத்தின் பிரபல நடிகை ஒருவர் தங்க கடத்தல் செய்துவருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அங்குள்ள மொத்த நடிகர்களும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனராம். வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நடிகர், நடிகைகளை கூட்டிச் செல்லும் நடிகை ஒருவர் தான் இந்த தங்க கடத்தலில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அக்கட தேசத்து நடிகர், நடிகைகள் பலரும் இதில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அந்த திரையுலக வட்டாரங்கள்
 

தமிழ் சினிமாவுக்கு ஹோல் சேலில் நடிகைகளை அனுப்பும் மாநிலத்தின் பிரபல நடிகை ஒருவர் தங்க கடத்தல் செய்துவருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அங்குள்ள மொத்த நடிகர்களும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனராம்.
வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நடிகர், நடிகைகளை கூட்டிச் செல்லும் நடிகை ஒருவர் தான் இந்த தங்க கடத்தலில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அக்கட தேசத்து நடிகர், நடிகைகள் பலரும் இதில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அந்த திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சினிமா உலகைச் சேர்ந்த மற்றொரு நடிகை ஒருவரும் இதற்கு முன்பு தங்க கடத்தலில் ஈடுபட்டு சிறைவாசம் சென்றாராம்.
கடத்தல் பற்றிய விவரங்கள் மேலும் மேலும் தெரிய வர இதில் மிகப்பெரிய நடிகர்கள் மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. நடிகையை இன்னும் ஆழமாக விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று போலீஸ் தரப்பில் முடிவு செய்துள்ளார்களாம்.
இதனை அறிந்த அந்த சினியுலக நடிகர், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனராம். நடிகை சம்பந்தப்பட்ட சினிமா சார்ந்த மற்றும் சினிமா அல்லாத பலரையும் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனராம்.