×

சமூக வலைத்தளத்தில் லீக்கான ‘மாஸ்டர்’ காட்சிகள்… பின்னணி என்ன?

சமூக வலைத்தளத்தில் மாஸ்டர் படக்காட்சிகள் லீக்காகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து எப்படி படக்காட்சிகள் கசிந்தன என படக்குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படம் நாளை ரிலீசாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்டிரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமத்தையும் லிலித் குமார் பெற்றுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்களுக்கு படத்தை அனுப்பும்
 

சமூக வலைத்தளத்தில் மாஸ்டர் படக்காட்சிகள் லீக்காகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து எப்படி படக்காட்சிகள் கசிந்தன என படக்குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படம் நாளை ரிலீசாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்டிரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமத்தையும் லிலித் குமார் பெற்றுள்ளார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்களுக்கு படத்தை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

எப்படி லீக்கானது என தீவிரமாக வரும் படக்குழு, எங்கெல்லாம் படம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து லீக்காகி இருக்கலாமா என விசாரித்து வருகிறது. தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட சோனி பிரஜக்டர்கள் மூலம் இயக்கும் திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில் திரையிட ஹார்ட் டிஸ்க் மூலமாக படத்தை அனுப்புவார்கள். அப்படி அனுப்பும்போது படம் லீக்காவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதனால் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளை திரும்பப்பெற படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதவிர எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என ஆலோசித்து வருகிறது.