ஆர்யாவின் ‘கேப்டன்’ எப்படி இருக்கு ?... ட்விட்டர் விமர்சனம் !

ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
‘டெடி’ படத்திற்கு பிறகு சக்தி செளந்தரராஜன் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன்’. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இமான் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.
இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். .இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதா என்பதை ட்விட்டர் மூலம் பார்க்கலாம்.
‘கேப்டன்’ திரைப்படத்தில் நான் பார்த்த வரைக்கும் சக்தி சௌந்தரராஜனின் கதை மற்றும் திரைக்கதை தான் பிரச்சனையே. ஆம் அவரது படத்தின் கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தப்போதிலும், கதை ரீதியாக ஏமாற்றமடைகின்றன. இந்த படம் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் உள்ளது.
இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கும். எல்லா இடங்களிலும் பல நேர்மறையான மதிப்புரைகள் உள்ளது.