என்னய்யா இப்டி சொல்றிங்க, படம் அவ்ளோ மோசமாவா இருக்கு... 'லைகர்' ட்விட்டர் விமர்சனம்!

 
liger-review-43

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'லைகர்' திரைப்படம் உருவாகியுள்ளது. பாலிவுட்  நடிகை அனன்யா பாண்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா சர்வதேச குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.  உலகளவில் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தற்போது லைகர் படத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் தான் முதன் முதலில் இந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார். 

liger

படத்திற்கு பிரம்மாண்டமான அளவு ப்ரோமோஷன் செய்யப்பட்டது. எனவே படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை அவர்களின் விமர்சனங்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். 


"விஜய் தேவரகொண்டாவின் உடலமைப்பு மெருகேற்றத்தைத் தவிர படத்தில் எந்த கூடுதல் அம்சங்களும் இல்லை. அனன்யா பாண்டே மிகவும் மோசமாக நடித்துள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரம் இல்லை (இயக்குனர் தான் வில்லன்). முதல் பாதியாவது கொஞ்சமாவது பார்க்க முடிந்தது. இரண்டாம் பாதியில் சுத்தமாக முடியவில்லை. மைக் டைசன் கிளைமேக்ஸ் காட்சி படத்திற்கு ஒட்டவில்லை. முழுக்க முழுக்க காலாவதியான காட்சிகள். மோசம்!"


"இப்பொழுது தான் லைகர் திரைப்படம் பார்த்தேன் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் படம் ஓகே. ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் படம் பெரிய ஹிட் என்று சொல்ல மாட்டேன். பார்க்கலாம் அவ்வளவுதான். விஜய் தேவரகொண்டாவின் துள்ளலான நடிப்பு, அண்ணே பாண்டே மோசமாக நடித்துள்ளார். கதை எளிமையாக செல்கிறது."


"அம்மா மகன் இடையேயான காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ரம்யா கிருஷ்ணன் மற்றும் விஜய் தேவர் கொண்டார் இருவரும் சிறந்த தேர்வு. கதாநாயகன் கதாபாத்திரம் வடிவமைப்பதில் பூரி ஜெகநாத் சிறந்தவர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பின்னணி இசை சிறப்பாக இருந்தது. இரண்டாம் பாதி கொஞ்சமாவது நன்றாக இருந்திருந்தால் இந்த படம் ஹிட் ஆயிருக்கும்."


"நேர விரையம். மோசமான கதை, மிகவும் மிக மோசமான திரைக்கதை. பெரிய நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர். கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டாம்."


"தாங்க முடியல, படத்தை பார்த்துடாதீங்க. பிரியமான பூரி ஜெகநாத இப்படித்தான் நமது தெலுங்கு சினிமாவை இந்தியா பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? கதாநாயகர்களின் வடிவமைப்பு மற்றும் வசனங்களுக்காக மிகவும் அறியப்படும் ஒரு இயக்குனர். ஆனால் இங்கு ஹீரோ படம் முழுக்க நன்றாக பேசக்கூட முடியாதவர் என்பதே மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது."


"படத்தின் முக்கியமான விஷயங்கள் மோசமாக இருப்பதால் இந்தப்  படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. கதாநாயகன் விஜய் தேவரகொண்டா மந்தமாக காணப்படுகிறார். மேலும் அனன்யா பாண்டே கிளாமர் காட்டக்கூட தகுதி இல்லாத வகையில் மோசமாக நடித்துள்ளார். அனைத்து பாடல்களும் சுமார். மேலும் படம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் உருவாகவில்லை." 


"மிக மிக சுமாரான முதல் பாதி. மிகவும் வழக்கமான கதை. விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை. எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயமும் படத்தில் இல்லை. விஜய் தேவரகொண்டாவின் திறமை வீணடிக்கப்பட்டுள்ளது. ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போல உணர்வைக் கொடுக்கிறது. இரண்டாம் பாதி அதற்கு மேல்.


"சராசரியான முதல் பாதி மற்றும் மோசமான இரண்டாவது பாதி. மைக் டைசன் பகுதிகள் சுவாரசியமாக இல்லை. மேலும் வடக்கில் #BoycottLiger என்ற எதிர்மறை போக்கு காரணமாக, படம் சரியாக வேலை செய்யாமல் போகலாம் மற்றும் தெற்கில் ஒரு சராசரி படம். விஜய் தேவரகொண்டாக்காக மட்டும் முதல் பாதியைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்."