நடிகர் விமலின் வலிமையான கம்பேக்... சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர்... 'விலங்கு' வெப் சீரிஸின் ட்விட்டர் விமர்சனம்!
Updated: Feb 18, 2022, 15:30 IST
சமீபகாலமாக விமல் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் தோல்வியைத் தழுவி வருகின்றன. இந்நிலையில் விமல் தற்போது வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். விலங்கு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய சீரிஸில் விமல் போலீசாக நடித்துள்ளார். புரூஸ் லீ' படத்தை இயக்கிய பிரசாத் பாண்டிராஜ் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். மேலும் முனிஸ்காந்த், பால சரவணன் ஆகியோரும் இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள விலங்கு சீரிஸ் ரசிகர்களைக் கவர்ந்ததா என்று அவர்களின் விமர்சனங்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.