×

அமைதியான காதல் கதை… சுஃபியும் சுஜாதாயும் பட விமர்சனம்!

காதலை மையமாக வைத்து உலகில் எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டு விட்டன. இன்னும் எடுக்கப்படும். மனிதன் வாழும் வரையிலும் காதல் வாழும், காதல் படங்கள் வந்து கொண்டே இருக்கும். நாம் எவ்வளவுதான் காதல் படங்கள் பார்த்தாலும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முறையாக காதலை வெளிப்படுத்தும் போது நாம் அதை ரசிக்கிறோம். சில படங்கள் நம் வாழ்க்கையைத் திரையில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும். அப்படி அவர்களை உணரச் செய்த படங்கள் மாபெரும் வெற்றியடையும். அதற்கு ஒரு உதாரணம்
 

காதலை மையமாக வைத்து உலகில் எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டு விட்டன. இன்னும் எடுக்கப்படும். மனிதன் வாழும் வரையிலும் காதல் வாழும், காதல் படங்கள் வந்து கொண்டே இருக்கும். நாம் எவ்வளவுதான் காதல் படங்கள் பார்த்தாலும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முறையாக காதலை வெளிப்படுத்தும் போது நாம் அதை ரசிக்கிறோம். சில படங்கள் நம் வாழ்க்கையைத் திரையில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும். அப்படி அவர்களை உணரச் செய்த படங்கள் மாபெரும் வெற்றியடையும். அதற்கு ஒரு உதாரணம் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘96’ படம்.

அதே போல் ஒரு காதலை மையமாக வைத்து நேற்று வெளியாகியுள்ள படம் சுஃபியும் சுஜாதாவும். இந்த படத்தில் ஜெயசூர்யா(ராஜிவ் நாயர்), அதிதி ராவ் (சுஜாதா), தேவ்(சூஃபி)ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை தற்போது நடப்பதில் இருந்து பத்து வருடங்களுக்கு முன்புள்ள பிளாஷ்பேக். வாய் பேச முடியாத பெண்ணாக இருக்கும் சுஜாதாவுக்கு சுஃபியை கண்டவுடன் அவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. காலப்போக்கில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதேசமயத்தில் சுஜாதாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். பெற்றோர்களின் சொல்லை தட்ட முடியாத சுஜாதா காதலனை புறக்கணித்து வேறொரு உடன் திருமணம் முடித்துக் கொண்டு துபாயில் செட்டில் ஆகிறார்.

கதை தற்போது: சூஃபி மாரடைப்பால் இறந்து போகிறான் .இந்த விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போன சுஜாதா அவளை முன்னாள் காதலனின் உடலை காண தனது கணவருடன் இந்தியா வருகிறார். சுஜாதா தன் கணவன் ராஜீவுடன் சூஃபியைக் காண வருகிறாள். அங்கு நடக்கும் நிகழ்வுகள் தான் மீதி படம்.

காதலை எத்தனை முறை நாம் பார்த்தாலும் அது காண்பிக்கிற விதம் நமக்கு ஒருவித அலாதியை உருவாக்கும். இந்த படமும் அப்படித்தான். ஒரு அழகிய நாவலைப் படிப்பது போன்ற ஒரு அனுபவத்தை இந்த படம் நமக்குக் கொடுக்கின்றது. படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். அந்த கருத்தை நாங்களும் மறக்கப்போவதில்லை. அவர்களின் காதலை இன்னும் ஒரு படி ரசிக்கவைக்கிறது ஒளிப்பதிவு. ராஜீவ் தன் மனைவி மீது வைத்துள்ள பாசத்தை நேரடியாக சொல்லாவிடிலும் அது படம் முழுக்க பேசாமல் பேசுகிறது. லாக்டவுன் நேரத்தில் காதல் படங்களை எதிர்நோக்கும் சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ரெக்கமண்டெட்!