×

அனல் பறக்கும் வசனங்கள், வலுவான கதைக்களம், வேற லெவல் இசை ... 'நெஞ்சுக்கு நீதி' ட்விட்டர் விமர்சனம்!

 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, இளவரசு, மயில்சாமி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  திப்பு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான இந்தியில் வெளியான 'ஆர்டிகிள் 15' திரைப்படம் சாதி பாகுபாடுகள் மற்றும் அதன் கொடுமைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தது. வணிக ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. 

இன்று நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை ரசிகர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். 


"மிகவும் அருமையான கதைக்களம் கொண்ட திரைப்படம். அருண்ராஜா காமராஜ் சகோதரரிடமிருந்து மறுபடியும் ஒரு அற்புதமான முயற்சி. உதயநிதி ஸ்டாலின் நல்ல மனிதர் மட்டுமல்ல நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். இருவரின் கூட்டணி வெறித்தனமாக உள்ளது. தன்யா ரவிச்சந்திரன் நன்றாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸின் இசை அருமையாக உள்ளது."


"நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின், சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி, இளவரசு, உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஆர்டிகிள் 15 படத்தின் அருமையான ரீமேக்கை கொண்டு வந்ததற்காக அருண்ராஜா காமராஜிற்கு பாராட்டுக்கள். படத்தின் ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை அனைத்தும் நன்றாக உள்ளது."


"ஆர்டிக்கிள் 15 படத்தின் சிறந்த ரீ-மேக்காக நெஞ்சுக்கு நீதி அமைந்துள்ளது. அருண்ராஜா காமராஜ் உருவாக்கம் சிறப்பாக உள்ளது.  படத்தின் ஆன்மாவான மையக்கதை எங்கும் திசைதிருப்ப படாமல் அப்படியே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. உதயநிதி நடித்த படங்களில் இது சிறந்ததாக அமைந்துள்ளது. கண்டிப்பாக பார்க்கலாம்."


"உங்கள் எழுத்திற்காகவே உங்களுக்கு மிகப்பெரிய விருது கொடுக்கலாம் அருண்ராஜா காமராஜ். ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கிறது. 2002 ஆம் ஆண்டின் வசனகர்த்தா விருது உங்களுக்குத்தான். பாராட்டுக்கள்."


"படத்தின் வலிமையான வசனங்கள் மற்றும் உருவாக்கத்திற்காக இந்தப்படம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறப்போகிறது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது. காலத்திற்கேற்ற அருமையான பின்னணி இசை மற்றும் இசையை வழங்கிய திபு நினன் தாமஸுக்கு பாராட்டுக்கள். அருண்ராஜா காமராஜ் அற்புதம் செய்துள்ளார்."


 


ஆர்டிகிள் 15 படத்தின் கதைக்கரு மற்றும் ஆன்மா சிதறாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அருண்ராஜா காமராஜ் எழுதி வெற்றி பெற்றுள்ளார்.