×

எதிர்பார்ப்பு இல்லமால் வெளியாகி மக்கள் மனம் வென்ற சமுத்திரகனி... 'விநோதய சித்தம்' பட ட்விட்டர் விமர்சனம்!

 

சமுத்திரகனி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனராக தமிழில் அறிமுகமான அவர் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில் சமுத்திரக்கனி மீண்டும் இயக்கத்திற்கு திரும்பிய படம் தான் ‘விநோதய சித்தம்’. இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் அடித்துள்ளார். தம்பி இராமையா, முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

படத்திற்கு மக்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை பார்வையாளர்களின் விமர்சனங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். 


புதிய கதைக்களம் இல்லை என்றாலும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தம்பி ராமையா மிகவும் அருமை. சமுத்திரக்கனியின் டிரேட்மார்க் வசனங்கள் அருமையாக இருந்தது. நிறைய நகைச்சுவை காட்சிகள் ஓரளவுக்கு சிரிக்க வைத்தன. 97 நிமிடமே படம் இருந்தாலும் படத்தில் சில இழுவைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அது படத்திற்கு சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.  விநோதய சித்தம் பார்க்கக்கூடிய காமெடி திரைப்படம்.



சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள வினோத சித்தம் திரைப்படம் மனநிறைவு உணர்வைக் கொடுக்கக் கூடிய சிறந்த திரைப்படம். ஓடிடியில் பார்ப்பதற்கு சிறந்த திரைப்படம். சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரும் மீண்டும் ஒரு சிறப்பான கதைக்களத்துடன் திரும்பியுள்ளனர்.


சமுத்திரக்கனியிடமிருந்து ஒரு நல்ல படம். குடும்ப ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். 97 நிமிடங்கள்தான். 50 வயது மதிக்கத்தக்க மனிதன் இறுதியாக அவரது வாழ்வின் மதிப்பு மற்றும் தனது குடும்பத்தினறின் அருமை பற்றியும் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அமைகிறது. தம்பி ராமையா தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஓடிடியில் பார்ப்பதற்கு மிகவும் அருமையான திரைப்படம்.


ஆச்சரியமாக சிறப்பாக இருந்தது. மிகவும் எளிமையான ஃபேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. தம்பி ராமையாவின் நடிப்பு மற்றும் சமுத்திரகனியின் இயக்கம் இரண்டும் சூப்பராக இருந்தது. வசனங்கள், காட்சிகள், பின்னணி, இசை எல்லாமே சிறப்பாக இருந்தது. கிளைமாக்ஸ் மிக அருமை. சில இழுவையான காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. விறுவிறுப்பாக நகரக் கூடிய 97 நிமிடங்கள்.


எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க தொடங்கிய படம் விநோதய சித்தம். ஆனால் மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் நன்றாகவும் விறுவிறுப்பாகவும் கவரக்கூடிய வசனங்கள், தெளிவான கதாபாத்திர வடிவமைப்பு, நடிப்பு எமோஷனல் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான 97 நிமிடங்கள். குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு ஃபேண்டஸி திரைப்படம். கண்டிப்பாக பார்க்கலாம்.