×

‘2.0’ அப்டேட்: மொத்தம் இத்தனை விஎஃபெக்ட்ஸ் காட்சிகளா? ஷங்கர் ஓபன் டாக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் இடம்பெற்றுள்ள விஎஃபெக்ட்ஸ்(VFX) காட்சிகள் குறித்த தகவலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் இடம்பெற்றுள்ள விஎஃபெக்ட்ஸ்(VFX) காட்சிகள் குறித்த தகவலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதற்கேற்ப கடந்த மாதம் ரிலீசான இப்படத்தின் டீசர் இந்திய சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. Here
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் இடம்பெற்றுள்ள விஎஃபெக்ட்ஸ்(VFX) காட்சிகள் குறித்த தகவலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் இடம்பெற்றுள்ள விஎஃபெக்ட்ஸ்(VFX) காட்சிகள் குறித்த தகவலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதற்கேற்ப கடந்த மாதம் ரிலீசான இப்படத்தின் டீசர் இந்திய சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ‘2.0’ படத்தின் மிரட்டாலான விஎஃபெக்ட்ஸ் காட்சிகள் குறித்த ரகசியத்தை இயக்குநர் ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள விஎஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு செலவிடப்பட்ட தொகை, படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளார்.

 

மேலும், இப்படத்தில் ஷூட் பண்ண காட்சிகளை தவிர 2100 விஎஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதுடன், திரைப்படம் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவ.29ம் தேதி பிரம்மண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.