2023 சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது பார்கிங் படத்திற்கு அறிவிப்பு
Aug 1, 2025, 18:52 IST
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்- எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பார்க்கிங் திரைப்படம் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய இரு பிரிவுகளில் தேசிய விருதை வென்றுள்ளது.
71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய திரைப்பட விருது, பார்க்கிங் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது
- சிறந்த ஒளிப்பதிவாளர் விருது: லிட்டில்விங்ஸ் என்ற ஆவணப் பட ஒளிப்பதிவாளர்கள் சரவணமருது சவுந்தர பாண்டியன் & மீனாக்சி சோமனுக்கு அறிவிப்பு
- சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது, டைம்லெஸ் தமிழ்நாடு என்ற ஆவணப்படத்திற்கு அறிவிப்பு
- திரைப்பட பாடலுக்கு இசையமைத்த சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வாத்தி பட பாடலுக்காக ஜி.வி.பிரகாசுக்கு அறிவிப்பு
- சிறந்த திரைக்கதை, வசனத்திற்கான தேசிய விருது, பார்க்கிங் திரைப்படத்தின் வசனகர்த்தா ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அறிவிப்பு
- பார்க்கிங் திரைப்படத்தில் நடித்திருந்த எம்.எஸ்.பாஸ்கருக்கு, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு
- உள்ளொழுக்கு என்ற மலையாள படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கு, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு
- அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடித்த ஷாரூக்கானுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு
- தி கேரளா ஸ்டோரி என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிப்பு
- 12th Fail என்ற இந்தி படத்தில் நடித்த, நடிகர் விக்ராந்த் மாசிக்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு