×

ராஜா லுக்கில் கம்பீரமாக மிரட்டும் கமல்

மாஸ்டர் படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து இயக்குவதாக இருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக பேசப்பட்டது. ஆனால், கொரோனா வந்து ரஜினி – கமல் இணையும் அந்த திட்டத்தை தகர்த்துவிட்டது. அதன்பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனே நடிப்பதாக முடிவானது. பிக்பாஸ் ஒருபக்கமும், தேர்தல் வேலைகள் மறுபக்கமும் என்று பரபரவென்று இருக்கும் கமல்ஹாசன் விரைவில் லோகேஷ் டைரக்ஷனில் நடிக்கிறார். இந்நிலையில் வரும் 7ம் தேதி அன்று கமல்ஹாசனின் 66வது பிறந்தநாள். இதை முன்னிட்டு, கமல்ஹாசனின் காமன்
 

மாஸ்டர் படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து இயக்குவதாக இருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக பேசப்பட்டது. ஆனால், கொரோனா வந்து ரஜினி – கமல் இணையும் அந்த திட்டத்தை தகர்த்துவிட்டது. அதன்பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனே நடிப்பதாக முடிவானது.

பிக்பாஸ் ஒருபக்கமும், தேர்தல் வேலைகள் மறுபக்கமும் என்று பரபரவென்று இருக்கும் கமல்ஹாசன் விரைவில் லோகேஷ் டைரக்‌ஷனில் நடிக்கிறார். இந்நிலையில் வரும் 7ம் தேதி அன்று கமல்ஹாசனின் 66வது பிறந்தநாள். இதை முன்னிட்டு, கமல்ஹாசனின் காமன் டிபியை வெளி்யிட்டிருக்கிறார் லோகேஷ்.

கமலின் பர்த் டேவை முன்னிட்டு #LeaderBirthdayCDP #HappyBirthdayLeader ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து ரசிகர்கள், ராஜா லுக்கில் கம்பீரமாக மிரட்டும் கமலின் அந்த காமன் டிபி்யை கொண்டாடி வருகின்றார்கள்.

கமல்ஹாசனின் கவச உடையில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் இருப்பதால், கட்சியை முன்னிலைப்படுத்தும் விதமாக படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.