×

வலுக்கும் எதிர்ப்பு: விடாப்பிடியாக நிற்கும் ‘800’ தயாரிப்பு தரப்பு

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தமிழர்களும், தமிழர் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதிபதி நடிப்பதால்தான் இத்தனை எதிர்ப்பும். நாளுக்கு நாள் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், விஜய்சேதுபதி இப்படத்தில் இருந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வரும் நி்லையில், விஜய்சேதுபதியை நடிக்க வைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறது 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம். அந்நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை
 

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தமிழர்களும், தமிழர் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதிபதி நடிப்பதால்தான் இத்தனை எதிர்ப்பும். நாளுக்கு நாள் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், விஜய்சேதுபதி இப்படத்தில் இருந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வரும் நி்லையில், விஜய்சேதுபதியை நடிக்க வைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறது 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

அந்நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை அதைத்தான் சொல்கிறது.

’’முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது.

தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் இத்திரைப்படத்தின் கதையம்சம். இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக, இத்திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர். அதன்மூலம் இலங்கை தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக் காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத் தரும் என்பதை நாங்கள் முழுமையக நம்புகிறோம்.

கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பது தான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம்.’’என்று சொல்லி்யிருக்கிறார் 800 படத்தின் தயாரிப்பாளர்.