×

தொடர் ஆபாச மெசேஜ்கள்- பொல்லாதவன் நடிகை போலீசில் புகார்

 

நடிகர் தர்ஷனின் ஆதரவாளர்களிடமிருந்து ஆன்லைன் வாயிலாக பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக நடிகை நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா பெங்களூரு காவல் ஆணையரிடம் முறைப்படி புகார் அளித்துள்ளார்.


ஜூன் 9 அன்று சுமனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள வடிகால் அருகே தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். கார் ஷெட்டில் தர்ஷன், பவித்ரா ஆகியோர் ரேணுகாசாமியை தாக்கியதில், அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது கூட்டாளி பவித்ரா கவுடா உள்ளிட்ட  17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 10 பேருக்கு ஜாமின் கிடைத்தது. அதன் பின், கர்நாடக உயர் நீதிமன்றம் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.


இந்நிலையில் கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாச மிரட்டல்கள் விடுப்பதாக நடிகை திவ்யா ஸ்பந்தனா போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் தர்ஷன் கைதாகியிருக்கும் வழக்கில் கொல்லப்பட்ட ரேணுகா சாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டதால் நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு இன்ஸ்டாகிராமில் தர்ஷனின் ரசிகர்கள்  ஆபாச மிரட்டல்கள் மூலம் அத்துமீறுவதாக ஆதாரத்துடன் பெங்களூரு போலீசில் அவர் புகாரளித்துள்ளார்.