×

”கொரோனா அச்சம் தேவையில்லை.. அதே சமயம் அலட்சியம் வேண்டாம்”- நடிகர் விவேக்

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நடிகர்கள் சமூக வலைதளம் மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதில் முக்கிய பங்காற்றுபவர் நடிகர் விவேக்.. தொடர்ந்து கொரோனா குறித்தும் சமூக பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விவேக் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.. அதில், “நிறையப் பேர்
 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நடிகர்கள் சமூக வலைதளம் மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதில் முக்கிய பங்காற்றுபவர் நடிகர் விவேக்.. தொடர்ந்து கொரோனா குறித்தும் சமூக பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விவேக் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்..
அதில், “நிறையப் பேர் மாஸ்க் என்ற பெயரில் ஏதோ ஒன்றைப் போட்டிருப்பதைப் பார்க்கிறேன். மூக்கையும், வாயையும் மூடுமாறு பலர் மாஸ்க் அணிவதில்லை. பல பேர் ஜாலியாக மாஸ்க்கை கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர். சில பேர் மாஸ்க்கை ஒற்றைக் காதில் ஸ்டைலாகத் தொங்கவிட்டுள்ளனர். இப்படியா மாஸ்க் போடுவது?

அதோடு மாஸ்கை இறக்கி விட்டு அல்லது கழட்டிவிட்டு விட்டு மற்றவர்களுடன் பேசுகிறார்கள். அப்படி செய்வதனால் மாஸ்க் போடுவதன் பயனே இல்லாமல் போகிறது. வெளியில் சென்றால் 2 மீட்டர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.. வெளியில் சென்று திரும்பினால், கை, கால், முகத்தை நன்றாக சோப்புத் தண்ணீரால் கழுவ வேண்டும்.. முழுமையாக குளித்துவிடுவது மிக நல்லது. இதையெல்லாம் சரியாக கடைபித்தாலே கொரோனா நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம். கொரோனா  பற்றிய அச்சம் தேவையில்லை. அதே வேளையில் அலட்சியம் கூடாது.” என்று விவேக் தெரிவித்துள்ளார்.