×

போலி ஐடியை பாலோ செய்யாதீர்கள்… ரசிகர்களை எச்சரித்த யோகிபாபு…

தன்னுடைய பெயரில் போலி ஐடி உருவாக்கி சில நபர்கள் ஏமாற்றுகிறார்கள். ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி யோகிபாபு கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது சமூக ஊடகங்கள். இதில் தங்களது வசதிகேற்ப ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சில நபர்கள் தங்களின் சுயலாபத்திற்காக போலி முகவர்களை பிரபலங்கள் பெயரில் ஆரம்பித்து விளம்பரம் செய்கின்றனர். இதனால் திரைப்பிரபலங்களுக்கும், அதை நம்பும் ரசிகர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதை தடுக்க
 

தன்னுடைய பெயரில் போலி ஐடி உருவாக்கி சில நபர்கள் ஏமாற்றுகிறார்கள். ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி யோகிபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது சமூக ஊடகங்கள். இதில் தங்களது வசதிகேற்ப ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சில நபர்கள் தங்களின் சுயலாபத்திற்காக போலி முகவர்களை பிரபலங்கள் பெயரில் ஆரம்பித்து விளம்பரம் செய்கின்றனர்.

இதனால் திரைப்பிரபலங்களுக்கும், அதை நம்பும் ரசிகர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சமீபத்தில்கூட நடிகர் சிபிராஜ் பெயரில் புதுவித மோசடி ஒன்று நடைபெற்றது. சிபிராஜ், தனது புதிய படத்திற்கும் கதாநாயகி மற்றும் வயது வாரியாக நடிகர்கள் தேவை என குறிப்பிட்ட ஒரு விளம்பரம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு பெயரிலும் இதுபோன்று போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அந்த போலி நபர்கள் யார் என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட யோகிபாபு, அந்த கணக்கு போலி என ரசிகர்களை எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போலி ஐடியை பக்கத்தை பதிவிட்டு, ப்ரெண்ட்ஸ், இது போலி ஐடி பாலோ செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.