×

வயநாடு நிலச்சரிவு- சிரஞ்சீவி, ராம்சரண் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

 


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி, அதிமுக சார்பில் ரூ.1 கோடி, காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி என நிதி உதவி வழங்கினர்.அதை தொடர்ந்து, நடிகர் மோகன் லால் ரூ.3 கோடியும், நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரும் நிதி உதவி வழங்கி உள்ளனர். அந்த வரிசையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும், நடிகருமான ராம்சரண் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர்.