×

"என் பெயர், எங்கள் குடும்பம், தயாரிப்பு நிறுவன பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்"- அக்ஷராஹாசன் பரபரப்பு அறிக்கை

 

என் பெயர், எங்கள் குடும்பம் மற்றும் தயாரிப்பு நிறுவன பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என நடிகை அக்ஷராஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை அக்ஷராஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் பெயர், எங்கள் குடும்பம் மற்றும் தயாரிப்பு நிறுவன பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். நாங்கள், ஊட்டியில் இருந்து திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக பரவும் தகவல் பொய், இப்ராகிம் அக்தர் என்ற நபருக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபருடன் யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.