×

இயக்குனரை திருமணம் செய்த பிரபல பாலிவுட் நடிகை.. வைரலாகும் புகைப்படம்

தனது படத்தின் இயக்குனரையே திருமணம் செய்துக்கொண்டார் பிரபல பாலிவுட் நடிகை யாமி கவுதம். திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாமி கவுதம். பாலிவுட் நடிகையான இவர், ‘கௌரவம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் கலக்கி வருகிறார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் யாமி கவுதம், ‘விக்கி டோனார்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக
 

தனது படத்தின் இயக்குனரையே திருமணம் செய்துக்கொண்டார் பிரபல பாலிவுட் நடிகை யாமி கவுதம்.

திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாமி கவுதம். பாலிவுட் நடிகையான இவர், ‘கௌரவம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் கலக்கி வருகிறார்.

தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் யாமி கவுதம், ‘விக்கி டோனார்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்தது. இதைத்தொடர்ந்து ஆதித்யா தார் இயக்கிய தேசிய விருது படமான ‘தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ படத்தில் பல்லவி சர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து யாமி கௌதம் அனைவரின் பாராட்டை பெற்றார்.

இந்நிலையில் ‘தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ படத்தின் இயக்குனர் ஆதித்யா தாரும், யாமி கவுதமும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனாவின் இரண்டாம் அலை நேரத்தில் இன்று எளிமையான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர். தனது திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ஆதித்யா – யாமி கவுதம் ஜோடிக்கு திரை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.