×

ஏலே படத்தின் இசை வெளியீட்டு விழா.. இரண்டு பாடல்களை வெளியிட்ட படக்குழு…

சமுத்திரகனி நடிக்கும் ஏலே படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான படம் சில்லுக்கருப்பட்டி. இந்த படத்தை ஹலீதா ஷமீம் இயக்கினார். இதைத்தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கிய படம் ‘ஏலே’. இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி நிறுவனமான வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தின் முதல் பிரதி அடிப்படையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து
 

சமுத்திரகனி நடிக்கும் ஏலே படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

கடந்த ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான படம் சில்லுக்கருப்பட்டி. இந்த படத்தை ஹலீதா ஷமீம்  இயக்கினார். இதைத்தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கிய படம் ‘ஏலே’. இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி நிறுவனமான வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

படத்தின் முதல் பிரதி அடிப்படையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த 26ம் தேதி ‘ஏலே’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு, வரும் பிப்ரவரி 12-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்தது.

இந்நிலையில் ஏலே படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு வீடியோ பாடல்கள் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரகனி, நடிகர் மணிகண்டன், இயக்குனர் ஹலீதா ஷமீம், தயாரிப்பாளர் புஷ்கார் காயத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.