×

செல்பியில் கலக்கும் அஜீத் – ஷாலினி நட்சத்திர ஜோடி… வைரலாகும் புகைப்படம்…

நடிகர் அஜீத் – ஷாலினி இணைந்திருக்கும் செல்பி ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. நடிகர் அஜீத்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தவர் ஷாலினி. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு பிறகு அஜித் – ஷாலினி இடையே காதல் மலர்ந்தது.இதன்பிறகு காதலித்து வந்த ஜோடி, திருமணம் செய்துகொண்டனர். தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் , நடிகைகளில் சிறந்த காதல் ஜோடியாக திகழும் அஜித்-ஷாலினி இருவரும் கடந்த 2000-வது ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
 

நடிகர் அஜீத் – ஷாலினி இணைந்திருக்கும் செல்பி ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

நடிகர் அஜீத்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தவர் ஷாலினி. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு பிறகு அஜித் – ஷாலினி இடையே காதல் மலர்ந்தது.இதன்பிறகு காதலித்து வந்த ஜோடி, திருமணம் செய்துகொண்டனர். தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் , நடிகைகளில் சிறந்த காதல் ஜோடியாக திகழும் அஜித்-ஷாலினி இருவரும் கடந்த 2000-வது ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும்‌ உள்ளனர்.

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வருகிற மே 1-ந் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் ஷாலினியும் ஒன்றாக இணைந்து செல்ஃபி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.அஜீத்தை பொது வெளியில் காண்பது என்பது அரிதான விஷயம். நீண்ட நாள் கழித்து ‌இந்த செல்ஃபி புகைப்படம் வந்தள்ளதால் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.