×

‘தல’ ‘தளபதி’ படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ்… ரசிகர்கள் ஆரவாரம்…

புது வருடம் பிறந்தாலே பெரிய நடிகர்கள் படம் ரிலீஸாவது வழக்கமாகிவிட்டது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 9மாதம்க திரையரங்குகள் மூடப்பட்டு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கை திறந்தால் நஷ்டம் ஏற்படும் என திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர். இதையடுத்து 100 சதவீத திரையரங்கை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் விஜய், தயாரிப்பாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 100 சதவீத
 

புது வருடம் பிறந்தாலே பெரிய நடிகர்கள் படம் ரிலீஸாவது வழக்கமாகிவிட்டது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 9மாதம்க திரையரங்குகள் மூடப்பட்டு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கை திறந்தால் நஷ்டம் ஏற்படும் என திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர். இதையடுத்து 100 சதவீத திரையரங்கை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் விஜய், தயாரிப்பாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.

இது ஒரு புறம் இருந்தாலும் கொரோனாவுக்கு பின் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இதுவரை திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தினால், பழைய படி மக்கள் வருவதில்லை என கூறப்பட்டு வந்தது. அதனால் மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வர வழைக்க பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறனர். 

அந்தவகையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வாரம், அதாவது வருகிற ஜனவரி 8-ந் தேதி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா, கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் போன்ற படங்களை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். இதனால் அஜீத், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.