×

கேஜிஎப் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களை களமிறக்கிய விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் நடித்து வரும் மோகன்தாஸ் படத்தில் கேஜிஎப் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் சகோதர்கள் இணைந்துள்ளனர். முரளி கார்த்திக் என்பவர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மோகன்தாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜேர்னரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் தற்போது ஸ்டண்ட் வடிவமைப்பாளர்களான அன்பறிவ் சகோதர்கள்
 

விஷ்ணு விஷால் நடித்து வரும் மோகன்தாஸ் படத்தில் கேஜிஎப் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் சகோதர்கள் இணைந்துள்ளனர்.

முரளி கார்த்திக் என்பவர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மோகன்தாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கிரைம் த்ரில்லர் ஜேர்னரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் தற்போது ஸ்டண்ட் வடிவமைப்பாளர்களான அன்பறிவ் சகோதர்கள் இணைந்துள்ளனர்.

கேஜிஎஃப் முதல் பாகத்திலே சண்டைக் காட்சிகள் தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது என்று சொல்லலாம். அந்தளவிற்கு வெறித்தனமான சண்டைக் காட்சிகளை அந்தப் படத்திற்கு வடிவமைத்தவர்கள் அன்பறிவ் சகோதரர்கள். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 படத்திற்கும் அன்பறிவ் சகோதரர்கள் தான் ஸ்டண்ட் கோரியோகிராஃப் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அன்பறிவ் சகோதரர்கள் தற்போது மோகன்தாஸ் படத்தில் இணைந்துள்ளதால் படத்தில் வேற லெவலில் வெறித்தனமான சண்டைக் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.