×

“அவன் காதலை ஏற்றுக்கொண்டேன்”- அனுஷ்கா

 

தனது முதல் காதல் குறித்து நடிகை அனுஷ்கா மனம் திறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகை அனுஷ்கா கூறுகையில், “நான் 6ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது, எனது வகுப்பில் ஒரு பையன், என்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறினான். ஆனால் I love you என்பதன் அர்த்தம் கூட புரியாத வயதிலும் அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். அந்த சம்பவம் எனது வாழ்க்கையில் ஒரு இனிமையான, அழகான நினைவாக இப்போதும் உள்ளது” என்றார்.

பல வருடங்களாக, குறிப்பாக பாகுபலி படத்தின் வெளியீடு மற்றும் வெற்றிக்குப் பிறகு, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபாஸ் இடையேயான உறவு குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. டோலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டிக்கு தற்போது வரை திருமணமாகாததால் பிரபாஸுடனான உறவு குறித்து வதந்திகள் வந்தவகையில் உள்ளன. ஆனால் இருவருமே நாங்கள் எப்போதும் "வெறும் நண்பர்கள்" என்று கூறி வருகின்றனர்.