×

விரைவில் வெளியாகும் அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’.. வெளியானது புதிய அப்டேட்…

அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தள்ளிப்போகாதே’ படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘100’ படத்திற்கு பிறகு நடிகர் அதர்வா – சாம் ஆண்டன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இணையதள குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் சார்பாக ஸ்ருதி நல்லப்பா தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
 

அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தள்ளிப்போகாதே’ படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

‘100’ படத்திற்கு பிறகு நடிகர் அதர்வா – சாம்‌ ஆண்டன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இணையதள குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் சார்பாக ஸ்ருதி நல்லப்பா தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு முன்பு அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தள்ளிப்போகாதே’. கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

எம்.கே.ஆர்.பிரொக்ஷன் சார்பில் ராம்பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா பட்டதாரி இளைஞனாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட ஷூட்டிங்கையடுத்து தயாரிப்பு பணிகள் விறுப்பாக நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த படத்தை சென்சார்டு போர்டுக்கு அனுப்பி வைத்தனர் படக்குழு. படத்தை பார்த்த தணிக்கை துறையினர், ‘தள்ளிப் போகாதே’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழு செய்து வருகிறது.