×

ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி!?

மலையாள நடிகர் நிவின் பாலி இயக்குனர் ராம் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ராம் தமிழ் சினிமாவின் தேர்ந்த இயக்குனர்களுள் ஒருவர். இவருடைய படங்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. நமது அன்றாட வாழ்வில் நாம் காணத் தவறிய அழகான சம்பவங்களை திரை மொழி மூலம் எடுத்துச் சொல்லும் வித்தகர் ராம். இவர் இயக்கத்தில் கடைசியாக பேரன்பு திரைப்படம் வெளியாகியது. அதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இயக்குனர் ராம் தனது அடுத்த
 

மலையாள நடிகர் நிவின் பாலி இயக்குனர் ராம் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் ராம் தமிழ் சினிமாவின் தேர்ந்த இயக்குனர்களுள் ஒருவர். இவருடைய படங்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. நமது அன்றாட வாழ்வில் நாம் காணத் தவறிய அழகான சம்பவங்களை திரை மொழி மூலம் எடுத்துச் சொல்லும் வித்தகர் ராம்.

இவர் இயக்கத்தில் கடைசியாக பேரன்பு திரைப்படம் வெளியாகியது. அதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.

இயக்குனர் ராம் தனது அடுத்த படத்திலும் பிரபல மலையாள நடிகருடன் தான் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம், நடிகர் நிவின் பாலி, ராம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிவின் பாலி நடிப்பில் நேரம், ரிச்சி ஆகிய படங்கள் தமிழிலும் வெளியாகியுள்ளன. தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலி தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவின் பாலி தற்போது துரமுகம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.