நடிகர் சிரஞ்சீவி பிறந்தநாள் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்
Aug 22, 2024, 17:30 IST
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது இயற்பெயர் கோனிடெலா சிவசங்கரா வரபிரசாத். தீவிர அனுமான் பக்தரான இருந்து வந்த இவர் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க, சினிமாவில் நடிக்கும்போது தனது பெயரை சிரஞ்சீவி என மாற்றிக்கொண்டார். 1978இல் வெளியான பிராணம் கரீது என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.