×

விக்ரம் நடிக்கும் 'CHIYAAN 64'... அசத்தல் அப்டேட்

 

சியான் விக்ரம் நடிக்கும் 'CHIYAAN 64' படத்தை இயக்குகிறார் பிரேம்குமார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது. அடுத்ததாக பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இயக்குனர் பிரேம்குமார்- நடிகர் விக்ரம் ஜோடி இணைந்துள்ளது. சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மண்டேலா மற்றும் மாவீரன்  இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட சியான்63 கைவிடப்பட்ட நிலையில் சியான்64 அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.விக்ரம் கேட்கும் சம்பளத்தைத் தர தமிழில் எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. ஆனால் வேல்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெய்யழகன் பட இயக்குநர் பிரேம்குமாருடன் இணைகிறார் நடிகர் விக்ரம். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம்  தயாரிப்பதாக அறிவித்துள்ளது.