×

“சினிமா டிக்கெட் விவகாரம்” – உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களின் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலை, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தவண்ணம் உள்ளன. ஒரு டிக்கெட் விலை ரூ1000 இருந்து 3000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை அமைச்சர்
 

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களின் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலை, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தவண்ணம் உள்ளன. ஒரு டிக்கெட் விலை ரூ1000 இருந்து 3000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அரசு வரையறுத்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவேண்டும் எனவும், திரைத்துறையினர் கோரிக்கையை ஏற்று விரைவில் தட்கல் முறையில் டிக்கெட் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கேளிக்கை வரி சலுகை தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அவர், விரையில் முதல்வரிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.