×

பிரபல தமிழ் நடிகை மீது கொலை மிரட்டல் புகார்..!

 
நடிகை சரண்யா பொன்வண்ணன் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும், சரண்யாவுக்கும் காரை நிறுத்துவதில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீதேவி, சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து, சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்திருக்கிறார்.