×

மிரட்டும் ‘டைரி’… அருள்நிதி படத்தின் முக்கிய அப்டேட்

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைரி’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் நிதானமாக வெற்றி படங்களை தருபவர் நடிகர் அருள்நிதி. தனித்துவம்மிக்க கதைக்களம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி. அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களான அமைகின்றன. தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி அடுத்து நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘டைரி’. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்குகிறார். நடிகை
 

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைரி’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் நிதானமாக வெற்றி படங்களை தருபவர் நடிகர் அருள்நிதி. தனித்துவம்மிக்க கதைக்களம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி. அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களான அமைகின்றன.

தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி அடுத்து நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘டைரி’. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்குகிறார். நடிகை பவித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வி.ஜெ.ஷாரா, ஜெயப்பிரகாஷ், ‘ஆடுகளம்’ கிஷோர், சாம்ஸ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். ரோன் எதன் யோஹான் இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படம் பல மர்மங்கள் நிறைந்த புலனாய்வு த்ரில்லராக உருவாகிறது. கடந்தாண்டே இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெற்று வந்த ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.