தேவரா படத்தின் 2-வது பாடல் ரிலீஸ்; காப்பி அடித்தாரா அனிருத்..?
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் '' இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை காவலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் உருவான மனிகே மஹே என்ற ஆல்பம் பாடல் ட்யூனை எடுத்து பட்டி டிங்கரிங் செய்து புது பாடலாக 'சுத்தமல்லி' பாடலை அனிருத் உருவாகியுள்ளதாக அந்தப் பாடலையும், இந்தப் பாடலையும் கம்ப்பேர் செய்து நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.