×

தேரே இஷ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்!

 

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தற்போது, இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ராஞ்சனா படத்தின் கதையைத் தொட்டு உருவாகி வருகிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் விமானப்படை அதிகாரியாகவும் சில காட்சிகளில் நடித்து வருகிறாராம். அதற்கான தோற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.