78-வது சுதந்திர தினம்: கவனம் ஈர்க்கும் இயக்குனர் அட்லி பதிவு
Aug 15, 2024, 18:00 IST
இந்தியாவில் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இயக்குனர் அட்லி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்தியாவில் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திரைப்பட இயக்குனர் அட்லி, இது குறித்து வெளியிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
எப்போது ஒரு பெண் சுதந்திரமாக சாலையில் நடமாடுகிறாளோ அப்போது இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லலாம் என மகாத்மா காந்தியின் வரிகளை பதிவிட்டு, இரு பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்திச்செல்லும் வகையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்