புதிய படத்தில் இணையும் சிவகார்த்தியேன், தேசிங்கு பெரியசாமி கூட்டணி!
நடிகர் சிவகார்த்திகேயன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அடுத்து நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கவுதம் மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தனது முதல் படத்திலேயே தரமான படத்தைக் கொடுத்து கோலிவுட்டில் மிகவும் பிரபலமானர் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதும், தனக்காக ஒரு கதை பண்ணுமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேளைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளாராம். தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் தேசிங்கு தெரிவித்துள்ளார்.
தனது அடுத்த படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று இதுவரை உறுதியாகவில்லை எனவும், ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த பின்னரே நடிகர்கள் குறித்து யோசிக்க முடியும் என்றும் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.