×

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல இயக்குநர் சுதா கொங்காரா.. பிரபலங்கள் வாழ்த்து..

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர் மிகக்குறைவு. விரல் விட்டு என்னக்கூடிய அளவிற்கே பெண் இயக்குநர்கள் இருக்கிறார். பல்வேறு துறையில் சாதனைப்படைத்து வரும் பெண்கள் சமீப காலமாகவே சினிமா துறையில் இயக்குநராக அவதரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தன் முதல் படத்தின் மூலமே அதிக கவனம் பெற்றவர் சுதா கொங்காரா(Sutha Kongara). கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், மெட்ராஸ் மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் வரலாறு மற்றும்
 

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர் மிகக்குறைவு. விரல் விட்டு என்னக்கூடிய அளவிற்கே பெண் இயக்குநர்கள் இருக்கிறார். பல்வேறு துறையில் சாதனைப்படைத்து வரும் பெண்கள் சமீப காலமாகவே சினிமா துறையில் இயக்குநராக அவதரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தன் முதல் படத்தின் மூலமே அதிக கவனம் பெற்றவர் சுதா கொங்காரா(Sutha Kongara).

கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், மெட்ராஸ் மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் வரலாறு மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். படித்து முடித்த சுதா கொங்கரா இயக்குநர் மணிரத்னத்திடம் கிட்டத்தட்ட 7 வருடம் உதவி இயக்குநராகவே இருந்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘துரோகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த், பூர்ணா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட  பலர் நடித்திருந்தனர். நண்பர்களுக்கு இடையில் மோதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

முதல் படத்தின் மூலம் கவனம் பெற்ர சுதா கொங்காரா, தன் அடுத்தப் படத்தை இயக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் 6 ஆண்டுகள்.. கடந்த 2016ம் ஆண்டு மாதவன்-ரித்திகா சிங்கை வைத்து இவர் இயக்கிய ”இறுதிச்சுற்று” திரைப்படம் பெரிதாகப் பேசப்பட்டது. பாக்ஸிங்கை மையமாக வைத்து அவர் இயக்கிய இந்தப் படத்திற்கு பிறகு சுதா கொங்காரா மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று, தேசிய விருது உள்ளிட்ட  பல விருதுகளையும் கைபற்றியது.

இதன் பிறகு தற்போது சூர்யா நடிப்பில் ‘சூரரை போற்று’ படத்தை இயக்கியுள்ளார்.  ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போயுள்ளது.
இந்நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சுதா கொங்கராவிற்கு, ரசிகர்கள் மற்றும்  சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.